டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஸ்ரீவில்லிபுத்தூர்  நகராட்சியில் ஒருங்கிணைந்த துப்புரவுப் பணி

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியின் 7 மற்றும் 8-வது வார்டுகளில் நமது நகரம் தூய்மை நகரம் என்ற திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த துப்புரவுப் பணி சார் ஆட்சியர் அமர்

News image
Updated On :16 நவம்பர் 2014, 7:26 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியின் 7 மற்றும் 8-வது வார்டுகளில் நமது நகரம் தூய்மை நகரம் என்ற திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த துப்புரவுப் பணி சார் ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது. வட்டாட்சியர் சாந்தா முன்னிலை வகித்தார்.


இப் பகுதியில் உள்ள தைக்காப்பட்டி தெரு, ஆராய்ச்சிபட்டி பிள்ளையார் கோவில் தெரு, ஊத்துமலை பரதேசி மடம் தெரு மற்றும் கார்த்திகை மடம் தெருக்களில் நடைபெற்ற ஒருங்கிணைந்த துப்புரவுப் பணியில் கழிவு நீர் பாதையில் உள்ள மண் அப்புறப்படுத்தப்பட்டு, குப்பைகள் அள்ளப்பட்டும், மண் மேடுகள் அப்புறப்படுத்தப்பட்டும் துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது.

மேலும் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசு உற்பத்தியை தடுக்க ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள 38 பணியாளர்கள், இப் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள தேவையாற்ற ஆட்டுக்கல், பிளாஸ்டிக் கப்கள், டயர் போன்றவற்றை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.

பொதுமக்கள் குப்பைகளை கழிவு நீர் பாதையிலோ, தெருவிலே கொட்டக் கூடாது என்றும், மக்கும் குப்பைகளை பச்சைப் பெட்டியிலும், மக்கா குப்பைகளை சிவப்பு பெட்டியிலும் கொட்ட வேண்டும் என்றும் கேட்டு்க் கொள்ளப்பட்டனர்.  மேலும் குப்பைகளை மீறி தெருவிலோ, கழிவு நீர் பாதையிலோ போடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நமது நகரை நாம் தூய்மையாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் பழனிவேல் கேட்டுக் கொண்டார். இதற்கான ஏற்பாடுகளை துப்புரவு ஆய்வாளர்கள் கண்ணன், பாஸ்கரன், தவிட்டுராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.